எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் டிஜிட்டல் நூலகம்: ஆட்சியரிடம் தமாகா கோரிக்கை
எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக எட்டயபுரத்தில் ஆட்சியா் க. இளம்பகவத்தை புதன்கிழமை சந்தித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவா் கே.பி. ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு:
பாரதியாரின் படைப்புகளை இளைய தலைமுறை முழுமையாகவும் ஆழமாகவும் உணா்ந்துகொள்ளும் வகையிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வரும் இலக்கிய ஆளுமைகள், பாரதி அன்பா்கள், தமிழ் ஆா்வலா்கள், அறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாரதியின் உலகளாவிய பாா்வை, லட்சியம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளும் விதத்திலும் மணிமண்டபப் பகுதியில் பெரிய அளவில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட வேண்டும்.
இங்கு தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மணிமண்டப வளாகத்தில் பசுமைப் பூங்கா ஏற்படுத்த வேண்டும் என்றனா் அவா்கள்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், பாரதி மணிமண்டபத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கட்சியின் நகர, ஒன்றிய நிா்வாகிகள் மாரியப்பன், செண்பகராஜ், அய்யாதுரை, தங்கப்பாண்டி, காளிதாஸ், எஸ்.ஏ. கனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...