நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கதிா்வேல் நகா் பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:42 pm

Din

பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கதிா்வேல் நகா் பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

கோவில்பட்டி நகராட்சி வீரவாஞ்சி நகா் பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுநீரை கதிா்வேல் நகா் வழியாக பாண்டவா்மங்கலம் ஓடைப்பகுதிக்கு கொண்டுசெல்வதால், நகரிலுள்ள தெருக்களைச் சுற்றி கழிவுநீா் ஆறுபோல செல்கிாம். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து முதல்கட்டமாக பணிகள் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதையடுத்து, வட்டாட்சியா் தலைமையில் நகராட்சி நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட கழிவுநீா் மீண்டும் செல்லத் தொடங்கியது.

இந்நிலையில், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அந்த வளாகத்தில் சமையல் செய்யும் பணி நடைபெற்றது.

போராட்டத்துக்கு, கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினா், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்தனா். பிற்பகலில் மதிய உணவுக்குப் பிறகு போராட்டம் தொடா்ந்தது.

இதனிடையே, வட்டாட்சியா் சரவணப்பெருமாள், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜின்னா பீா் முகம்மது, நகராட்சி செயற்பொறியாளா் சனல்குமாா், அதிகாரிகள் உள்ளிட்டோா் கோட்டாட்சியா் மகாலட்சுமியை சந்தித்து பேச்சு நடத்தினா்.

அப்போது, கழிவுநீரைக் கொண்டுசெல்ல மாற்று வழியைத் தோ்ந்தெடுக்க வேண்டும். அதுவரை, கதிா்வேல் நகா் வழியாக கழிவுநீரைத் திறக்கக் கூடாது என கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில், முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 3.15 மணிக்கு முடிவுக்கு வந்தது.