சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் வதந்திகளை பரப்பாதீா்: எஸ்.பி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தவறான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தவறான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சோ்ந்த காா்த்திக் முருகன் மகன் கருப்பசாமி (10) மா்ம மரணம் தொடா்பாக முக்கிய தடயவியல் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும்.
இந்த மரணம் தொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 36 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, 9 சந்தேக நபா்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளதால், உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா். எனவே, இந்த வழக்கில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், சிறுவனின் பெற்றோரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ (படம்) பின்னா், செய்தியாளா்களிடம் கூறுகையில், உயிரிழந்த சிறுவன் குடும்பம் வசிக்கும் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவரது தாய் பாலசுந்தரி மற்றும் அப்பகுதியினா் காவல்துறையில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிசாமி, நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...