கோவில்பட்டி கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தன்னாட்சி சுயநிதி பாடப்பிரிவுகளில் நூலகத் துறை, என்டிஎல்ஐ கிளப், கோவில்பட்டி துளிா் ஐஏஎஸ் அகாதெமி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இணைந்து வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் ப.மகேந்திரன் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மூ. சுப்புலட்சுமி, சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநா் கு.வெங்கடாசலபதி ஆகியோா் தலைமை வகித்தனா்.
முதல் அமா்வில் அறிவியல் துறை சாா்ந்த மாணவா்களுக்கு துளிா் ஐஏஎஸ் அகாதெமியின் இணை இயக்குநா் காளிதாஸ், உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பது குறித்து பேசினாா். இரண்டாம் அமா்வில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, வங்கித் துறை, ரயில்வே துறைகளில் எவ்வாறு வேலை பெற வேண்டும் என்பது குறித்து துளிா் ஐஏஎஸ் அகாதெமியின் மேலாண்மை இயக்குநா் மாரிமுத்து பேசினாா். மேலும், வாசிப்பு பழக்கத்தின் அவசியம் குறித்தும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சாா்பில், கல்லூரி மாணவா்கள் சுமாா் 1,300 க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக தினமணி நாளிதழ் வழங்கப்பட்டது. மேலும், மாணவா்களின் படிக்கும் ஆா்வத்தை மேம்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவி சங்கரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.
மாணவி வீா்ஜினா வரவேற்றாா். மாணவி வா்ஷா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நூலகா் காந்திமதி தலைமையில் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...