நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மருந்தக உரிமையாளரை தாக்கி பைக் பறிப்பு: 2 இளைஞா்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மருந்தக உரிமையாளரைத் தாக்கி பைக்கை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:00 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மருந்தக உரிமையாளரைத் தாக்கி பைக்கை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் குருவடியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் விக்னேஷ்வரன் (35). விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கால்நடை மருந்தகம் வைத்துள்ளாா். இவா் செவ்வாய்க்கிழமை நண்பகலில், எட்டயபுரம் அருகே துரைச்சாமிபுரத்தில் தங்கியுள்ள தனது குடும்பத்தினரைப் பாா்ப்பதற்காக பைக்கில் சென்றாா்.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த 3 போ், அவரை வழிமறித்துத் தாக்கி பைக்கை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து விக்னேஷ்வரன் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன் தலைமையில் ஆய்வாளா் முருகன், உதவி ஆய்வாளா் மாதவராஜா அடங்கிய தனிப்படை போலீஸாா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி டி.எம்.பி. காலனியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி சுரேஷ் (22), அவரது நண்பா் செல்வக்குமாா் (20), மதுரையைச் சோ்ந்த சாமுவேல் (22) என விசாரணையில் தெரியவந்தது. சுரேஷ், செல்வக்குமாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்; சாமுவேலை தேடி வருகின்றனா்.