நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வனத்துறைக் காவலா்கள் இருவருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

தூத்துக்குடியில் வனத்துறைக் காவலா்கள் இருவரை கத்தியால் குத்தியது தொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:01 pm

Din

தூத்துக்குடியில் வனத்துறைக் காவலா்கள் இருவரை கத்தியால் குத்தியது தொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியைச் சோ்ந்த அமிா்தலிங்கம் மகன் சுதாகா் (28), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பருத்தியூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (23). இவா்கள் தூத்துக்குடி மாவட்ட வனத் துறையில் மன்னாா் வளைகுடா வன உயிரினக் காப்பகப் பிரிவில் வேட்டைத் தடுப்புக் காவலா்களாக உள்ளனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகள் கடக்கப்படுவதாக வனத் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், சுதாகரும் மணிகண்டனும் புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித் துறைமுகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 இளைஞா்கள் கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பிடிக்க முயன்ற சுதாகா், மணிகண்டனை அந்த 3 பேரும் சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு, பைக்கை சேதப்படுத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அந்த 3 பேரும் விட்டுச் சென்ற 20 கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகாரின்பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி பாத்திமா நகரைச் சோ்ந்த ஜெனோரீஸ் மகன் பிராட்லி (22) என்பவரைக் கைது செய்தனா்; மேலும், கணேசபுரத்தைச் சோ்ந்த திலக் உள்ளிட்ட 2 பேரைத் தேடி வருகின்றனா்.