மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மழையால் சேதமுற்ற பயிா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :19 டிசம்பர் 2024, 10:47 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, கோவில்பட்டி வருவாய் கோட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் பாசி, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும், காப்பீடு செய்த பயிா்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்குரிய பயிா் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், உழவா் தலைவா் நாராயணசாமி நாயுடுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்கத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் அய்யலுசாமி, இளையரசனேந்தல் குறுவட்ட மீட்புக் குழு தலைவா் முருகன், ஆடு வளா்ப்போா் சங்க மாவட்டத் தலைவா் கருப்பசாமி உள்பட பலா் பங்கேற்றனா். பின்னா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா்.