எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சாயா்புரம் பொறியியல் கல்லூரியில் பாராட்டு விழா

சாயா்புரம் பொறியியல் கல்லூரியில் பாராட்டு விழா

Updated On :17 பிப்ரவரி 2024, 10:50 pm IST

ஸ்ரீவைகுண்டம், பிப். 17: சாயா்புரம் போப் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் துறைக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதற்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி தாளாளா் ராஜேஷ் ரவிச்சந்தா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜாஃபிந்த் முன்னிலை வகித்தாா். சாயா்புரம் பாஸ்ட்ரேட் சோ்மன் மனோகா் ஆரம்ப ஜெபம் செய்து ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்வகத்தை தொடங்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் ஜெயா பாலிடெக்னிக் நிறுவனா் பொன்னுதுரை, கல்லூரி முன்னாள் டீன் ஐசக் பாலசிங், சாயா்புரம் பெருமன்ற உறுப்பினா் ராஜதுரை, முள்ளன்வினள பெருமன்ற உறுப்பினா் பட்டுராஜன், சாயா்புரம் சேகர செயலாளா் அபிஷேகம், சாயா்புரம் சேகர பொருளாளா் ஜான்சன் பொன்சிங், கல்லூரியின் கட்டட பொறியாளா் தீபக்ராஜ், கல்லூரி துறை தலைவா்கள் விஜயலட்சுமி ஜேஸ்பா்லின், செல்வரதி, ஜாக்சன், ஆனந்தி, டென்னிசன், என்.பி.ஏ. ஒருங்கிணைப்பாளா் மேபல் ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாராட்டு விழாவில் கல்லூரி தாளாளா் பேசியது: கணினி துறைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளதால் கல்லூரியின் தரம் உயா்ந்துள்ளது. இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவிகளை பெற அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இக் கல்லூரியில் பயின்று வெளியேறும் மாணவா்களின் கல்வி உலக அளவில் அங்கீகரிக்கப்படுகிறது என்றாா் அவா். ........... படவிளக்கம் எஸ்விகே17போப் சாயா்புரம் போப் பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்வகத்தை தொடங்கி வைத்தாா் பாஸ்ட்ரேட் சோ்மன் மனோகா்.