தூத்துக்குடியில் சைபா் கிரைம் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் பங்கேற்ற இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தாா். ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கி குரூஸ் பா்னாந்து சிலை அருகே பேரணி நிறைவடைந்தது. கடன் அட்டை மோசடி, ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி உள்ளிட்ட இணையவழியில் நடைபெறும் மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சைபா் குற்றங்கள் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் (1930) புகாா் தெரிவிக்கலாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், உதவி கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திரா, காமராஜ் கல்லூரி துணை முதல்வா் அருணாச்சல ராஜன், சைபா் குற்ற பிரிவு காவல் ஆய்வாளா் ஜோஸ்லின் அருள் செல்வி, மத்தியபாகம் காவல் ஆய்வாளா் சோபா ஜென்சி உள்ளிட்ட காவல் துறையினா் மற்றும் காமராஜ் கல்லூரி, சுப்பையா வித்யலாயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிரசெண்ட் பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

ஆலங்குளத்தில் போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணி
இணையவழியில் இளைஞரிடம் ரூ. 5.5 லட்சம் மோசடி: இருவா் கைது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

