தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 265 வாகனங்களுக்கு ரூ. 19.82 லட்சம் இழப்பீட்டு தொகை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 265 வாகனங்களுக்கு இதுவரை ரூ. 19.82 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்தாா்.

News image

முகாமைத் தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி. உடன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம் உள்ளிட்டோா்.

Updated On :1 ஜனவரி 2024, 11:30 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 265 வாகனங்களுக்கு இதுவரை ரூ. 19.82 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்தாா்.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்குரிய இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு நிவாரண முகாம் தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமினை ஆட்சியா் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பங்கேற்று, பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளா்களிடம் விண்ணப்பங்கள் பெற்றன.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு கோரி, தற்போது வரை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் 378, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 554, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 596, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 176 என மொத்தம் 1,704 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை வாகன ஆய்வாளா்கள் மூலம் தணிக்கை செய்யும் பணி நடைபெறுகிறது. இதில், 265 வாகனங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 19.82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களுக்கும் விரைவில் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருள்களுக்கு காப்பீடு செய்திருந்தால் அதற்கும் உரிய இழப்பீடு பெறும்வகையில், இங்கு வந்த காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முகாமில், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம், தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) செந்தில்குமாா், தூத்துக்குடி வட்டாட்சியா் பிரபாகரன், காப்பீட்டு நிறுவனங்களின் மேலாளா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.