கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலக முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினர்.
கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினர்.

கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலக முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விளாத்திகுளம் எட்டையாபுரம் கயத்தாறு ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் விவசாயிகள் பயிர் செய்த உளுந்து பாசிபப்பயிர், மக்காச்சோளம், கம்பு, மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்தன. 

எனவே கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலக முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் தங்கள் கைகளில் சேதம் அடைந்த உளுந்துகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com