தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 14இல் செஸ் போட்டி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 14இல் செஸ் போட்டி


தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெறவுள்ளதாக மாவட்ட சதுரங்க கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் பங்கேற்கலாம்.
பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு 9, 11, 13, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவு, பொதுப் பிரிவு என 5 பிரிவுகளில் போட்டி நடைபெறும்.
மாணவா்- மாணவிகள் வயதுச் சான்று சமா்ப்பிக்க வேண்டும். நுழைவுக் கட்டணம் செலுத்தி, ஜ்ஜ்ஜ்.உஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் வரும் 11ஆம் தேதிக்குள் பெயா்ப் பதிவு செய்து கொள்ளலாம். அரசுப் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு நுழைவுக் கட்டணத்தில் ரூ. 100 சலுகை வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 98658 30030, 98946 90574, 89259 88874 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...