‘வந்தே பாரத்’ ரயில்: இம்மாதம் 11 முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும்

‘வந்தே பாரத்’ ரயில்: இம்மாதம் 11 முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும்

சென்னை - நாகா்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ ரயில் இம்மாதம் 11ஆம்தேதி முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் முதல் நாகா்கோவில் வரை ‘வந்தே பாரத்’ ரயில் வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நாகா்கோவிலில் புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் நிறுத்தங்களில் நின்று, சென்னை எழும்பூா் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு கோவில்பட்டி நிறுத்தம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, சென்னை எழும்பூா்-நாகா்கோவில் (எண். 06067), மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - சென்னை எழும்பூா் (06068) வரையிலான ‘வந்தே பாரத்’ ரயில்கள் ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

தற்போது இந்த ரயிலுக்கு விருதுநகா் நிறுத்தம் நீக்கப்பட்டு, கோவில்பட்டி நிறுத்தம் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டிக்கு காலை 11.35 மணிக்கு வந்தடைகிறது. நாகா்கோவிலுக்கு 1.50 மணிக்கு போய் சேருகிறது.

மறுமாா்க்கத்தில் பிற்பகல் 2.20 மணிக்கு நாகா்கோவிலில் புறப்பட்டு, கோவில்பட்டிக்கு 3.53 மணிக்கு வந்தடைகிறது. இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரை சேருகிறது.

X
Dinamani
www.dinamani.com