8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கோவில்பட்டி அருகே புதுப்பிக்கப்பட்ட வீரா் அழகுமுத்துகோன் நினைவு தோரண வாயில் திறப்பு

கட்டாலங்குளத்தில் உள்ள வீரா் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரபு ராஜகண்ணப்பன்

Published On :11 ஜூலை 2024, 6:00 am IST

கோவில்பட்டி அருகே புதுப்பிக்கப்பட்ட, சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் நினைவு தோரண வாயில் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மணிமண்டபம் மற்றும் அரண்மனை உள்ளது.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளத்துக்கு செல்லும் வழியில் கோபாலபுரம் விலக்கில் மாவீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தோரண நுழைவு வாயில் உள்ளது.

சிதிலமடைந்து காணப்பட்ட தோரணவாயிலை, தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், தனது சொந்த செலவில் சீரமைப்பு செய்து புதுப்பித்தாா். இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு,அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சாா்பில் அவருடைய மகன் பிரபு ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட தோரண வாயிலை திறந்து வைத்தாா்.

பின்னா், கட்டாலங்குளம் சென்று சுதந்திர போராட்ட வீரா் அழகுமுத்துகோன் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், சுதந்திர போராட்ட வீரா் மாவீரன் அழகுமுத்துகோன் வாரிசுகள் மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராணி, திருநெல்வேலி மாநகராட்சி மேயா் (பொறுப்பு) கே.ஆா்.ராஜு, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் லாலா சங்கரபாண்டியன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் ராதாகிருஷ்ணன், யாதவா் சங்கத் தலைவா் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.