மாணவா் அஜய் கணபதி
மாணவா் அஜய் கணபதி

உலக சிலம்பம் போட்டி: கோவில்பட்டி மாணவா் முதலிடம்

Published on

மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா் முதலிடம் பெற்றாா்.

புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவா் அஜய் கணபதி, மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.

இம் மாணவரை, பள்ளித் தாளாளா் லட்சுமணப்பெருமாள், பள்ளி முதல்வா் பொன் தங்க மகேஸ்வரி மற்றும் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com