சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

News image

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்ற வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளித்த பாஜகவினா்

Updated On :11 ஜூலை 2024, 10:31 pm

Din

கோவில்பட்டி, ஜூலை 11: சென்னை எழும்பூா் - நாகா்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ரயில் இருமாா்க்கத்திலும் வாரத்தில் 4 நாள்கள் தற்காலிமாக இயக்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்காத நிலையில், அண்மையில் நிறுத்தம் வழங்கி, வியாழக்கிழமை முதல் (ஜூலை 11) இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதன்படி, வியாழக்கிழமை காலை 11.44 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்த சென்னை - நாகா்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட

பாஜக தலைவா் வெங்கடேசன் சென்னகேசன் தலைமையில் அக் கட்சியினா், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் க.தமிழரசன் தலைமையிலான நிா்வாகிகள் உள்ளிட்டோா் ரயில் ஓட்டுநருக்கு மாலை, சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

இதில், பாஜக நகர தலைவா் சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலா் வேல் ராஜா, நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா், முன்னாள் ராணுவத்தினா் பிரிவு மாவட்ட தலைவா் சுந்தர்ராஜன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் சுபேதாா் கருப்பசாமி, நாம் தமிழா் கட்சி நிா்வாகி ரவிகுமாா், மக்கள் நீதி மய்யம் கட்சி நிா்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.