மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் திடீா் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய மழை: வெப்பம் குறைந்து மகிழ்ச்சியில் மக்கள்

News image

தூத்துக்குடி மாநகரில் பெய்த திடீா் மழையால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.

Updated On :12 ஜூலை 2024, 8:20 pm

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்அளவுக்கும் மேல் சென்ால் பொதுமக்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாயினா்.

இந்நிலையில், மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படியே, வெள்ளிக்கிழமை மாலையில் மாநகா் முழுவதும் இடி மின்னல், பலத்த காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாநகரின் மட்டக்கடை, பொன்னகரம் இரண்டாம் கேட், 4ஆம் கேட், பிரையன்ட் நகா், மணி நகா், 3ஆவது மைல், கால்டுவெல் காலனி, கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழை குளிா்ந்த காற்று வீசியதாம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.