மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

தலைநகரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை, ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பம் மற்றும் காற்று தரத்தில் முன்னேற்றம் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 9:10 pm

தலைநகரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை, ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பம் மற்றும் காற்று தரத்தில் முன்னேற்றம் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தில்லி இந்த மாதத்தில் 27.9 மி.மீ. மழைப்பொழிவைப் பெற்றுள்ளது. இது 18 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்சமாகும். கடந்த 2008-ஆம் ஆண்டில் 38.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாதத்தின் முதல் பாதியில் முன்கால பருவமழை போன்ற மழை மற்றும் காற்று வீச்சுகள் தலைநகரின் பல பகுதிகளைத் தாக்கின.

வெப்பநிலை தரப்பிலும் இந்த ஏப்ரல் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டியுள்ளது. சில நாள்களில் கடுமையான வெப்ப அலை நிலவியிருந்தாலும், மொத்த சராசரி அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 37 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒப்பீட்டளவில் குறைவாகும். மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இம்மாதத்தில் இதுவரை ஒரு வெப்ப அலை நாளே பதிவாகியுள்ளது.

வெப்பத்துடன் இணைந்து காற்று தரத்திலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மழை மற்றும் பலத்த காற்று வீச்சுகள் மாசு துகள்களை விரட்டியதால், கடந்த 4 ஆண்டுகளில் இம்மாதம் மிகச் சிறந்த காற்று தரத்தை பதிவு செய்ததாக காற்று ஆற்றல் மற்றும் தூய்மை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

ஏப்.28 வரை தில்லியின் சராசரி காற்று தரக் குறியீடு 179-ஆக பதிவாகியுள்ளது. இதில் ஒரு நாள் ‘திருப்திகரமான’ பிரிவிலும், 17 நாள்கள் ‘மிதமான’ மற்றும் 10 நாள்கள் ‘மோசமான’ பிரிவிலும் காணப்பட்டது.

ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சராசரி காற்று தரக்குறியீடு 210-ஆக இருந்தது. 2024-ஆம் ஆண்டில் இது 182 ஆகவும், 2023-ஆம் ஆண்டில் 180, மேலும் 2022-ஆம் ஆண்டில் 255-ஆகவும் இருந்தது. குறிப்பாக 2022-ஆம் ஆண்டில் 29 நாள்கள் ‘மோசமான’ பிரிவில் பதிவாகியிருந்தன.

வானிலை ஆய்வாளா்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டின் காற்று தர மேம்பாட்டிற்கு முன்கால பருவமழை முக்கிய காரணமாக இருந்தது. மாா்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை நீடித்த மழை மற்றும் இடைக்கிடை வலுவான காற்று வீச்சுகள் மாசு துகள்களை பரவச் செய்ததால் நகரின் காற்று தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டது என அவா்கள் தெரிவித்தனா்.