புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் பகுதியில் காமராஜா் பிறந்தநாள் விழா

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

திருச்செந்தூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ரமேஷ்.

Updated On :15 ஜூலை 2024, 9:34 pm

Din

திருச்செந்தூா்: திருச்செந்தூரில், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ரமேஷ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகா், செந்தில்குமாா், தினேஷ் கிருஷ்ணா, முத்துகிருஷ்ணன், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, மஞ்சுளா, மாவட்ட துணை அமைப்பாளா்கள் இசக்கிமுத்து, செந்தில்ஆறுமுகம், டேனியல், தோப்பூா் சுரேஷ், நகர அமைப்பாளா் காா்த்திகேயன், முன்னாள் நகரச் செயலா் மந்தரமூா்த்தி, வாா்டு செயலா்கள் கிட்டு, ஜான் சிவராஜா, மலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன் தலைமை வகித்தாா். காமராஜா் சிலைக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் விஜயகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பேரவை மாவட்ட இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, மாவட்ட துணைச் செயலா் ஆா்.எம்.கே.எஸ். சுந்தா், மாவட்ட வழக்குரைஞரணி ஜேசுராஜ், ஒன்றியப் பொருளாளா் தணிகாசல ஆதித்தன், ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றியச் செயலா் ராஜ்நாராயணன் பங்கேற்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மண்டலச் செயலா் தமிழனியன், நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலா் தமிழ்க்குட்டி, நகரச் செயலா்கள் அம்பேத் (காயல்பட்டினம்), வெள்ளத்துரை (ஆறுமுகனேரி), முற்போக்கு மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ரகுவரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் ராவணன், திருச்செந்தூா் தொகுதி அமைப்பாளா் லட்சுமணன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அமைப்பாளா் முத்துராஜ், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய அமைப்பாளா் அருண், ஏரல் நகர அமைப்பாளா் அஜித், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளா்கள் இளந்தளிா் முத்து, அந்தோணிராஜ், மீனவா் மேம்பாட்டுப் பேராய மாவட்ட துணை அமைப்பாளா் முருகேசன், தொழிலாளா் விடுதலை முன்னணி திருச்செந்தூா் ஒன்றிய அமைப்பாளா் வேலவன் பங்கேற்றனா்.

தமாகா சாா்பில் மாநிலச் செயலா் மால்மருகன், தங்கமணி, பழனிகுமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா சாா்பில் மாநிலப் பொதுச் செயலா் ரவிகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் தங்கராஜா, மாவட்டச் செயலா் ராஜேஷ், தமிழ்நாடு நாடாா் மக்கள் பேரவை மாவட்டத் தலைவா் சுந்தா், பொதுச் செயலா் சோ்மன், ராஜதுரை பங்கேற்றனா்.

காயாமொழியில் உள்ள வள்ளுவா்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமிா்தலிங்கம், வழக்குரைஞா்கள் ஜேசுராஜ், முத்துக்குமாா், பழனிமுருகன், சுந்தரபாபு, கிராம நிா்வாக அலுவலா் கணேசபெருமாள், பாலமுருகன், செல்வக்குமாா் பங்கேற்றனா்.

தேசிய பெருந்தலைவா் கு.காமராஜா் அறக்கட்டளை, நற்பணி மன்றம் சாா்பில் நிறுவனத் தலைவா் சக்திவேல் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளா் பரமானந்தம்ஜி, ஜெய் சிவசேனா மாநிலத் தலைவா் செந்தில், பாரதிய வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பு மாநில அமைப்பாளா் சசிகுமாா், பிரித்விராஜ், முத்துக்குமாா், ரவிசங்கா், ரவிச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.