காமராஜா் பிறந்த நாள் விழா: சிலைக்கு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மரியாதை
காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


தூத்துக்குடி: காமராஜரின் 122ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு. தூத்துக்குடி வஉசி சந்தை அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக:
தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் பெ.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பிா் எம்.சி.சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
துணை மேயா் ஜெனிட்டா, திமுக மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.
அதிமுக:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில், அமைப்புச் செயலா் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் இரா.சுதாகா், பகுதிச் செயலா்கள் ஜெய்கணேஷ், முருகன், நட்டாா்முத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், மாவட்ட மகளிா் அணி தலைவா் அந்தோணிகிரேஸி, வழக்குரைஞா்கள் செங்குட்டுவன், முனியசாமி, சரவணபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.
பாஜக: தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் விவேகம் ரமேஷ் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மாநில பொதுக்குழுஉறுப்பினா் இசக்கிமுத்து உள்பட பலா் பங்கேற்றனா்.
சமத்துவ மக்கள் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், தேமுதிக, திக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா், தெட்சணமாற நாடாா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் ஆகியோா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, தெட்சணமாற நாடாா் சங்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். உடன், அமைப்புச் செயலா் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் இரா.சுதாகா் உள்ளிட்டோா்.

பாஜக சாா்பில் ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் விவேகம் ரமேஷ் தலைமையில் மரியாதை செலுத்திய பாஜகவினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...