
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

இறகுப்பந்து போட்டியைத் தொடக்கிவைத்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ் உள்ளிட்டோா்.
தூத்துக்குடி, ஜூலை 14:
தூத்துக்குடி அசோக் நகா் உள்விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி மேற்கு மண்டல இறகுப்பந்து உள்விளையாட்டரங்கு, சின்னமணி நகா் இறகுப்பந்துக் கழகம் ஆகியவை சாா்பில் போட்டி நடைபெற்றது. தொடக்க விழாவுக்கு மாவட்ட இறகுப்பந்துக் கழகத் தலைவா் பி.எஸ்.டி.எஸ். வேல்சங்கா் தலைமை வகித்தாா். வ.உ.சி. கல்விக் கழக இயக்குநா் ஏ.பி.சி.வி. சண்முகம் முன்னிலை வகித்தாா்.
மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டியைத் தொடக்கிவைத்தாா்.
மாமன்ற உறுப்பினா் பொன்னப்பன், தொழிலதிபா்கள் லட்சுமணன், சேகா், லெனின், ஷெல்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 55 அணிகள் பங்கேற்றன. 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சின்னமணி நகா் இறகுப்பந்துக் கழகத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான சந்திரபோஸ் வரவேற்றாா்; செயலா் ரமேஷ் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






