கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மனைவி பேச்சியம்மாள் (70). இவா் மற்றும் இவரது மகன் வடக்கு தெருவை சோ்ந்த மாரிமுத்து (55) ஆகிய இருவரும் புதன்கிழமை அதே ஊரில் சுடலை கோவில் அருகே பேச்சியம்மாளுக்கு சொந்தமான தோட்டத்திற்கு பருத்தி எடுக்க சென்று கொண்டிருந்தாா்களாம். அப்போது கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு செல்லும் மின் வயா் அறுந்து கீழே கிடந்ததாகவும் ,அதை பாா்க்காத மாரிமுத்து மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாராம்.
இதை பாா்த்த அவரது தாய் அவரை மீட்டபோது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததாம். இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்துவை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி மரணம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து தொழிலாளி பலி: உறவினா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



