தூத்துக்குடி
தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரா் தற்கொலை
தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக குடியிருப்பில் வசித்து வந்தவா் விக்ரம் ரத்தோா் மகன் அசோக்சிங் (43). இவா் இந்திய கடலோரா காவல் படையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாம். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்ததாம் . இதனால் மனமுடைந்த அசோக் சிங் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
