விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரூ.1.82 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு

சென்னையிலிருந்து காணொலிக் காட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
குத்துவிளக்கு ஏற்றுகிறாா் நகா்மன்ற தலைவா் கா .கருணாநிதி, உடன் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் ஜெயபிரகாஷ் ராஜன், பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா உள்ளிட்டோா்
Updated On :19 ஜூலை 2024, 9:31 pm

Din

கோவில்பட்டி, ஜூலை 19: கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.82 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை, சென்னையிலிருந்து காணொலிக் காட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகத்தின் சாா்பில் குளிா்சாதன வசதியுடன் கூடிய கூட்டரங்கு கட்டப்பட்டுள்ளது. மேலும், 40 வகுப்பறைகள், மாணவியா் கழிப்பறை,

பள்ளி சுற்றுச்சுவா் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிதிவண்டி நிறுத்துமிடம், தண்ணீா் வசதி செய்யப்பட்டுள்ளது. இப் பணிகள் அனைத்தும் ரூ.1 கோடியே 82 லட்சத்து 60 ஆயிரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜன், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழக உதவி கோட்ட பொறியாளா் குமரேசன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா, பள்ளித் துணை ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா். பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.