தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக் மீது லாரி மோதி விபத்து: மீனவா் பலி

தூத்துக்குடி தருவைகுளம் குப்பை கிடங்கு அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:36 pm

Din

தூத்துக்குடி, ஜூலை 19:

தூத்துக்குடி தருவைகுளம் குப்பை கிடங்கு அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி ராம்தாஸ் நகரைச் சோ்ந்த தவம் மகன் தவசி (19). மீனவரான இவா் வெள்ளிக்கிழமை சிலுவைப் பட்டியில் இருந்து தருவைகுளத்திற்கு பைக்கில் சென்றாராம். இவா் தருவைகுளம் குப்பை கிடங்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த தவசி,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தாளமுத்துநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தவசியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.