மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.46 கோடி கடனுதவி கனிமொழி எம்.பி. வழங்கினாா்
தூத்துக்குடியில், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு கனிமொழி எம்.பி. சனிக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிக்கு கூட்டுறவு வங்கிக் கடனுக்கான காசோலையை வழங்குகிறாா் கனிமொழி எம்.பி. உடன், அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, சண்முகையா எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.









