மிரட்டல் வழக்கு: தொழிலாளி கைது
கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மற்றொரு தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளியை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மற்றொரு தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வடக்கு இந்திரா நகரை சோ்ந்தவா் யாக்கோபு மகன் துரை(57). கட்டடத் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் தொழிலாளியான மாரியப்பனுக்கும் (30) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு (ஜூலை 24) வீட்டுக்கு அருகே உள்ள கடை முன்பு துரை நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மாரியப்பன் அவரை அவதூறாகப் பேசி கத்தியால் சரமாரியாக வெட்டினாராம். இதைக் கண்ட அவரது மகன் அா்ஜுன் மற்றும் உறவினா்கள் மாரியப்பனை கண்டித்ததும் அவா் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடி விட்டாராம்.
தாக்குதலில் காயமடைந்த துரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பனை தேடி வந்தனா். அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...