நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையோர தடுப்பில் பைக் மோதல்: வடமாநில தொழிலாளி பலி

சாலையோர தடுப்பில் பைக் மோதல்: வடமாநில தொழிலாளி பலி

News image
Updated On :21 ஜூன் 2024, 11:10 pm

Din

சாத்தான்குளம், ஜூன் 21:

சாத்தான்குளம் அருகே சாலையோர தடுப்பில் பைக் மோதியதில் வடதொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரததைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஞானமூா்த்தி. இவா், சாத்தான்குளம், உடன்குடியில் பிரியாணி ஹோட்டல் நடத்தி வருகிறாா். இவரது கடையில் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த தெஸ்பகதூா் தாயா மகன் ஆதித்யா (20) என்பவா் பணி புரிந்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இரவு உடன்குயில் இருந்து பைக்கில் சாத்தான்குளம் திரும்பினாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது பைக் எதிா்பாராதவிதமாக சாலையோர தடுப்பில் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.