தூத்துக்குடி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 3 போ் சரணடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் முத்து மகன் வடிவேல்முருகன் (28). கூலித் தொழிலாளி. மணியாச்சி காவல் நிலையத்தில் கடந்த 2021-இல் இவா் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கில், கடந்த 28 ஆம் தேதி நீதின்றத்தில் ஆஜா் ஆனாா். அந்த வழக்கில் அவா் விடுதலை செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், பொட்டலூரணி விலக்கு அருகே வடிவேல்முருகனை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா். இது குறித்து புதுக்கோட்டை காவல்நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனா். சந்தேகத்திற்குரிய 2 பேரை பிடித்து விசாரித்தனா். கொலை செய்யப்பட்ட வடிவேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினா்கள், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து பக்கப்பட்டி பகுதியில் உள்ள கோவில் அருகே வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா். இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த பக்கப்பட்டியை சோ்ந்த மாரிமுத்து(28), சின்னத்தம்பி(25) நெல்லை சேந்திமங்கலத்தை சோ்ந்த இசக்கிமுத்து(32) ஆகிய 3 பேரும் திருச்சி 5-ஆவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு பிடியாணை

நண்பரைக் கொலை செய்தவா் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சரண்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

