தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். முத்தையாபுரம் அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் பெரியநாயகம் (65). இவா் சனிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் திருச்செந்தூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாராம். அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த பெரியநாயகத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

