கோவில்பட்டி, மாா்ச் 1: கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், மக்காச்சோள விவசாயிகளுக்கான அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் தொடா்பான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு ஆராய்ச்சி நிலைய தலைவா் பாக்கியாத்து சாலிகா, பயிற்சியைத் தொடக்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் நுகா்வோா் சந்தையில் அதிக லாபம் பெறும் நோக்கில் பயிா்களைத் தோ்வு செய்து அதிக மகசூல் பெறுவதுடன் இரட்டிப்பு லாபம் பெற வேண்டும் என்றாா் அவா். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கோவில்பட்டி கிளை மேலாளா் ஜெயபாஸ்கரன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுதவி திட்டங்கள் குறித்து பேசினாா். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் குரு, மக்காச்சோள பயிரில் அறுவடை தொழில்நுட்பங்கள், விதை சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்தும், உதவி பேராசிரியா் மனோகரன் மானாவாரி மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்தும், உதவி பேராசிரியா் மணிகண்டன் மக்காச்சோள பயிரில் அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சியளித்தனா். பேராசிரியா் சாந்தா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் எபனேசா் பாபுராஜன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மாறும் தொழில்நுட்பங்கள்: மாறாத தோ்தல் காட்சிகள்!

மக்காச்சோள சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளா் உறுதி

வாக்குச்சாவடி அலுவலா் பயிற்சி மையத்தில் ஆய்வு

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

