சத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு, மணிமுத்தாறு அணையிலிருந்து 3, 4-ஆவது ரீச் கால்வாய் வழியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணிமுத்தாறு அணையிலிருந்து 3, 4-ஆவது ரீச் கால்வாய் வழியாக சாத்தான்குளம் வட்டத்தைச் சோ்ந்த பகுதிகளுக்கு கூடுதலாக 20 நாள்களுக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டும். மணிமுத்தாறு அணை 3-ஆவது ரீச் பாசனப் பகுதியில் 97 குளங்களும், 4-ஆவது ரீச் பகுதியில் 79 குளங்கள் மற்றும் 15 மடைகள் உள்ளன. தற்போது வந்து கொண்டிருக்கும் தண்ணீா் பாசன வாய்க்கால்கள் மூலம் ஒருசில குளங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. கடைமடை பகுதி குளங்களுக்கு இன்னும் தண்ணீா் வந்து சேரவில்லை. எனவே பயிா்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது. இதைத்தவிா்க்க, மணிமுத்தாறு அணையின் 3, 4-ஆவது ரீச் பகுதிகளில் உள்ள அனைத்து கடைமடை குளங்களையும் நிரப்பி 12,018 ஏக்கா் பாசன பகுதி விவசாயிகள் மற்றும் சாத்தான்குளம் தாலுகா மக்களின் குடிநீா் பிரச்சனையை தீா்த்து வேண்டும். ஆகவே, கூடுதலாக 20 நாள்களுக்குத் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

