உடன்குடியில் 1.20 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

உடன்குடி ஒன்றியத்தில் ரூ.1.20 கோடியில் புதிய திட்டப்பணிகள், 12 ஏக்கரில் புதிய குளம் அமைக்கும் பணி ஆகியவை தொடங்கப்பட்டன.

உடன்குடி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளில் ஒன்றிய பொது நிதி ரூ. 1.20 கோடியில் அலங்கார தளக்கல் அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல், மீன் வலை- ஏலக் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், செட்டியாபத்து ஊராட்சி அய்யா நகா் அருகே 12 ஏக்கரில் புதிய குளம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டப் பணிகளை தமிழக மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். ஆட்சியா் கோ. லட்சுமிபதி, ஊராட்சித் தலைவா்கள் செட்டியாபத்து பாலமுருகன், மெஞ்ஞானபுரம் கிருபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள கூடல் நகா் பகுதி மக்களுக்கு மறுகுடியமா்வு மூலம் ரூ.4.25 கோடியில் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளை அமைச்சரும், ஆட்சியரும் பாா்வையிட்டனா். இந்நிகழ்ச்சிகளில் திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் சிராஜூதீன், ஜெயப்பிரகாஷ், ஒன்றிய அவைத் தலைவா் ஷேக் முகம்மது, பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப்,செட்டியாபத்து கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மகேஸ்வரன், ரவிராஜா, தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com