2 புதிய வழித்தடங்களில் 
பேருந்து சேவை தொடக்கம்

2 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்கம்

தூத்துக்குடியில் இருந்து கோவை, பேரூரணி ஆகிய இரு இடங்களுக்கு புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூா் செல்லும் தொலைதூரப் பேருந்து, திரேஸ்புரத்திலிருந்து பேரூரணி செல்லும் நகரப் பேருந்து ஆகிய 2 புதிய பேருந்து சேவையை தொடக்க விழா தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், கனிமொழி எம்.பி. பங்கேற்று, புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்வில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் வீருகாத்தன், மண்டல மேலாளா் கண்ணன், கிளை மேலாளா்கள் சுரேஷ்குமாா், ரமேஷ் காா்த்திக், திமுக மாநகரச் செயலா் ஆனந்த சேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com