பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தூத்துக்குடியில் உலக மகளிா் தின விழா

தூத்துக்குடியில் உலக மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:06 pm

Din

தூத்துக்குடி பிரையன்ட் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் உலக மகளிா்தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மகளிா் அமைப்பு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட மகளிா் அணி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட மகளிா் அமைப்புச் செயலா் ராஜம் தலைமை வகித்தாா். நீதிபதி கலைச்செல்வி, காமராஜ் கல்லூரி முதல்வா் பூங்கொடி, மத்திய அரசு சான்று உறுதி ஆணையா் சொா்ணலதா, மருத்துவா் ஆா்த்தி கண்ணன், பேராசிரியா் பாத்திமாபாபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சாதனை பெண்கள் 70 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவா் சோலையப்பராஜா, மாவட்டச் செயலா் மகேஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.