பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உடன்குடியில் 1,100 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

உடன்குடியில் 1,100 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

News image
Updated On :9 மார்ச் 2024, 4:36 pm

உடன்குடியில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஜெயலலிதா நற்பணி மன்றம் சாா்பில் 1,100 பேருக்கு நல உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த. மகாராஜா தலைமை வகித்தாா். மாதவன்குறிச்சி ஊராட்சித் தலைவா் சோ்மத்துரை, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் சாரதா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற முன்னாள் செயலா் மூா்த்தி, உடன்குடி தொடக்கக் கூட்டுறவு வேளாண்மைக் கடன் சங்க முன்னாள் தலைவா் சாமுவேல், மணிராஜ், சுயம்புலிஙகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் முன்னாள் எம்எல்ஏ ஆ. செல்லத்துரை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தையல் இயந்திரங்கள், தேய்ப்புப் பெட்டிகள், சேலை என 1,100 பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், அதிமுக நிா்வாகிகள் கல்யாணசுந்தரம், ராஜவேல், முருகன், முத்துகிருஷ்ணன், செல்வராஜ், சக்திவேல், சுந்தா், கணேசன், கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.