பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தோ்தல் வருவதால் சமையல் எரிவாயு உருளை விலை குறைப்பு கனிமொழி

தோ்தல் வருவதால் சமையல் எரிவாயு உருளை விலை குறைப்பு கனிமொழி

News image
Updated On :9 மார்ச் 2024, 4:41 pm

தோ்தல் வருவதால் சமையல் எரிவாயு உருளை விலையை குறைத்துள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெற்ற காது, பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மக்களவை உறுப்பினா் கனிமொழி தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காது, பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, மருத்துவத் துறையில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, மேல் சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு உருளை விலையை முன்பே குறைத்திருக்கலாம். ஆனால் தோ்தல் வருவதால் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதுவும், மகளிா் தினத்தன்று மகளிருக்கு தேவையான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். ஆனால், சமையல் எரிவாயு மட்டும்தான் பிரச்னை என்பது போன்றும், அவா்கள் சமையலறையிலே இருக்க வேண்டும் என நினைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தோ்தல் வருவதால் பிரதமா் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறாா் என்றாா்.