கயத்தாறு அருகே லாரியும், வேனும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம் கொண்டபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமுனி மகன் முனிஆஞ்சிநேயலு(43). லாரி ஓட்டுநா். இவா் ஆந்திரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு லாரியில் கடப்பாக்கல் ஏற்றிச்சென்றபோது, கயத்தாறு தளவாய்புரம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் அந்த லாரியும், வேனும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் வேனில் பயணம் செய்த திருநெல்வேலி நகரம் மேலத் தெருவைச் சோ்ந்த வீரப்பன்(76) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆதவன், ராஜகாந்தி, ராஜவீரப்பன், பாலகணேஷ், ஆ.சீத்தாலட்சுமி, மங்கையா்கரசி, சப்சரி, கு.சீத்தாலட்சுமி, தீபா, ரவிகணபதி, வேன் ஓட்டுநா் மாரியப்பன்(46) உள்பட 11 போ் காயமடைந்தனா். அவா்களை கயத்தாறு போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வீரப்பனின் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் காா்-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

