/

வடக்கு சிலுக்கன்பட்டியில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு

வடக்கு சிலுக்கன்பட்டியில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு

News image
Updated On :9 மார்ச் 2024, 8:10 pm

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டியில் ரூ. 9.13 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் மாரிச்செல்வன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ எம்.சி. சண்முகையா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கட்டடத்தைத் திறந்துவைத்தாா். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகம், உதவிப் பொறியாளா் ரவி, கூட்டுறவுத் துறை சரகப் பதிவாளா் அந்தோணி பட்டுராஜ், திமுக ஒன்றியச் செயலா் ஜெயக்கொடி, ஊராட்சி துணைத் தலைவா் பிச்சைக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மேலத்தட்டப்பாறை பகுதியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையை எம்எல்ஏ திறந்துவைத்தாா். பின்னா், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், ஊராட்சித் தலைவா் மகேஸ்வரி முத்துமாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.