தூத்துக்குடியில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவா்-மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வு நடைப்பயணம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமையில் சிறப்பு வாக்காளா் விழிப்புணா்வு நடைப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, காமராஜ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் முதல் தலைமுறை வாக்காளா் மாணவி மாரியம்மாள் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இவ்விழிப்புணா்வு நடைப்பயணமானது தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி சாா்ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையா் எல். மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரா. ஐஸ்வா்யா, வருவாய் கோட்டாட்சியா் பிரபு, மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ், துணை ஆட்சியா்(தோ்தல்) ராஜகுரு, வட்டாட்சியா் பிரபாகரன், தோ்தல் வட்டாட்சியா் தில்லைப்பாண்டி மற்றும் சுமாா் 200 க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள், அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

