மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தூத்துக்குடியில் இளைஞா் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தற்கொலை

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

தூத்துக்குடி, பண்டாரம்பட்டியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் பாலமுருகன் (34). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். பாலமுருகன் 2021ஆம் ஆண்டு புதிய வீடு கட்டுவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின் பேரில் சிப்காட் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.