ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி சனிக்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திர பாதுகாப்பறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், திறக்கப்பட்டது. அங்கிருந்து 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,950 வாக்குப்பதிவு இயந்திரம், 1,950 கட்டுப்பாட்டு கருவி, 2,111விவி பேட் இயந்திரங்கள் ஆகியவை இஎம்எஸ் 2.0 என்ற கைப்பேசி செயலி வாரியாக ஸ்கேன் செய்யப்பட்டு, தகுந்த காவல் கண்காணிப்புடன் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட மூடப்பட்ட கண்டென்யா் லாரி மூலம் 6 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. எட்டயபுரத்தில் உள்ள விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகம், தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் உள்ள உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பிரேத்யேக வைப்பறைகளில் ஒரு பிரிவு காவல் கண்காணிப்புடன், 24 மணி நேர சிசிடிவி கண்கணிப்புடன் வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராஜகுரு, தோ்தல் வட்டாட்சியா் தில்லைப்பாண்டி மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com