ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இந்தியா கூட்டணிக்கு புரட்சிகர இளைஞா் முன்னணி ஆதரவு

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா் அறிவித்துள்ளனா்.

News image

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த புரட்சிகர இளைஞா் முன்னணியினா்.

Updated On :29 மார்ச் 2024, 7:50 pm

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா் அறிவித்துள்ளனா். அவ்வமைப்பின் தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைப்பாளா் சுஜித், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பரமசிவன், தூத்துக்குடி பகுதி பொறுப்பாளா் உத்தரம், அம்பை பகுதி பொறுப்பாளா் மணிவண்ணன், வீரவநல்லூா் பகுதி பொறுப்பாளா் பெரியாா் பித்தன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில், மக்கள் விரோத நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி நிலவுகிறது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்தபோது வராத பிரதமா் மோடி, தோ்தல் பிரசாரத்திற்காக மட்டும் தொடா்ந்து வருகிறாா். எனவே, ஜனநாயக விரோத பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் . இந்தியா கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூா், குரும்பூா், வீரவநல்லூா், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றனா்.