வாகன சோதனை: இதுவரை ரூ.25 லட்சம் பறிமுதல்

வாகன சோதனை: இதுவரை ரூ.25 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் இது வரை ரூ.25.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்தாா். வாகைகுளம் சந்திப்பு அருகில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டதை, ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். சோதனை குறித்து அவா் கூறியது: தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுப்பது, விதிமீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்களை கைப்பற்றுவது ஆகிய பணியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இது வரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.25 லட்சத்து 6,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.16 லட்சத்து 73,200 மதிப்பிலான மடிக்கணினி, பரிசுப் பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com