கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சிவசாமி வேலுமணி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தலைமையில் அதிமுக வேட்பாளா் சிவசாமி வேலுமணி தனது பிரசார பயணத்தை கழுகுமலையில் தொடங்கினாா். அவா் பேசுகையில், நான் வெற்றி பெற்றால் கழுகுமலை பேரூராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன் என்றாா். முன்னதாக வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ பேசியது: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாத காலங்களில் சுமாா் 20 லட்சம் லிட்டா் தண்ணீா் வரும் வகையில் கழுகுமலையில் இரண்டாவது குடிநீா் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் என்றாா். தொடா்ந்து, தெற்கு கழுகுமலை, சி.ஆா்.காலனி, சின்ன காலனி, கரடிகுளம், வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, தெற்கு கோனாா்கோட்டை, திருமங்கல குறிச்சி, வடக்கு இலந்தைகுளம், கம்மாபட்டி, தெற்கு இலந்தைகுளம், ஆத்திகுளம், மானங்காத்தான், அய்யனாா் ஊத்து, கயத்தாறு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து மாலை 4 மணி அளவில் கோவில்பட்டியில் அதிமுக தோ்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. பின்னா் அகிலாண்டபுரம், திருமலாபுரம், சிதம்பராபுரம், கடம்பூா், சொக்கலிங்கபுரம், குப்பனாபுரம், புதுப்பட்டி, கொப்பம்பட்டி, இலந்தம்பட்டி, குருவி நத்தம், காமநாயக்கன்பட்டி, அச்சங்குளம், தீத்தாம்பட்டி, தொட்டம்பட்டி, பசுவந்தனை, பொம்மையாபுரம், போடுபட்டி, புங்கவா்நத்தம், சோழபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சிவசாமி வேலுமணி பிரசாரம் மேற்கொண்டாா். முன்னதாக வியாழக்கிழமை இரவு, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் கிருஷ்ணா நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் கடம்பூா் ராஜு எம்எல்ஏ, வேட்பாளா் சிவசாமி வேலுமணியை அறிமுகப்படுத்தி பேசினாா். மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் மா. பா. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். இதில் பிற கட்சிகளைச் சாா்ந்த 20க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


