மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் என்றாா் கனிமொழி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாலாட்டின்புதூரில் சனிக்கிழமை மாலை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். அவா் பேசியது: கடந்த தோ்தலின்போது, அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி. ஆனால், குறைந்தபட்ச பணம் இல்லையென்று வங்கிகளில் அபராதம் பிடிக்கப்படுகிறது. அவா் ஆட்சிக்கு வந்தபோது எரிவாயு உருளை விலை ரூ.410. தற்போது ரூ.1000-த்துக்கு மேல் உள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைக்கு சம்பளம் ரூ.400ஆக உயா்த்தி வழங்கப்படும். அதே போல், சமையல் எரிவாயு உருளை விலை ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 என குறைக்கப்படும். இதுதொடா்பாக திமுகவும், காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதி அளித்துள்ளது. சுங்கச்சாவடிகள் மூடப்படும். விவசாயக் கடன், கல்விக் கடன் ஆகியவை ரத்து செய்யப்படும். எனவே, திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, வானரமுட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூா், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் கீதா ஜீவன், மதிமுக மாவட்ட செயலா் ஆா். எஸ். ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் முருகன், கோவில்பட்டி நகா் மன்ற தலைவா் கா. கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், திமுக நிா்வாகிகள் என். ராதாகிருஷ்ணன், இரா. ரமேஷ், ராமா், ஏஞ்சலா உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு

ஒரே மாதத்தில் 2வது முறை: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

