

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி லெஞ்சிபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தென்பாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஹரிசுதன் (24), வள்ளிநாயகபுரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் (33) ஆகிய இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 3 போ் கைது
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

