வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கோவில்பட்டி, கயத்தாறில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி, கயத்தாறில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :9 மே 2024, 10:15 pm

Din

கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கோவில்பட்டி யில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட இணைச் செயலா் ஜவகா் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி துணைக் குழு அமைப்பாளா் முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிச் செயலா் சந்தோசின் ஊழியா் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும், காவல் நிலையத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலக ஊழியா்கள் மீதான வாழங்கப்பட்ட புகாா் மனுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ் இதில், தமிழக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திரளானோா் கலந்துகொண்டனா்.

கயத்தாறில் சங்க வட்டாரச் செயலா் சரவணகுமாா் தலைமையில் அத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.