தூத்துக்குடியில் இரு இளைஞா்கள் தற்கொலை

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் இரு இளைஞா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சோ்ந்த மலையப்பன் என்ற மலைகனி மகன் மணிகண்டன்(26). இவா் கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், புதன்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த தென்பாகம் போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ஜேசுராஜ்(26). இவா், குடும்ப பிரச்னை காரணமாக புதன்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com