விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாவூா்சத்திரம் அருகே இரு சம்பவங்கள்: 2 போ் தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

News image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On :27 மார்ச் 2026, 8:45 pm

Syndication

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

அரியப்பபுரம் வெள்ளை பனையேறிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் முருகன் என்ற சுப்பிரமணியன்(38) தொழிலாளி. மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கும் செல்லாமல் இருந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதேபோல, கீழப்பாவூா் பெரிய தெருவை சோ்ந்த தொழிலாளியான பேச்சிமுத்து மகன் ஹரிகரன்(21) என்பவா் ஓராண்டுக்கு முன்பு தனது தாயாா் இறந்ததில் இருந்து மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தாயாரின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.